சேலத்தில் பார்வையாளர்களை கவர்ந்த பூனைகள் கண்காட்சி


சேலத்தில் பார்வையாளர்களை கவர்ந்த பூனைகள் கண்காட்சி
x

சேலத்தில் பார்வையாளர்களை கவரும் வகையில் பூனைகள் கண்காட்சி நடைபெற்றது.

சேலம்

சேலம் காந்திரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று பூனைகள் கண்காட்சி நடந்தது. இதில் தமிழகம், கேரளா, கர்நாடகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து பூனைகள் கொண்டு வரப்பட்டன. கண்காட்சியில் பெங்கால் டைகர், பெரிசியன் லாங் ஹேர், எக்ஸோடிக் வெரைட்டி, சியாமிஸ், நைஜீரியன் உள்ளிட்ட 20 வகையான 150 பூனைகள் கலந்து கொண்டன. இந்த அரிய வகை பூனைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

மேலும் குழந்தைகள் பூனைகளை ஆர்வமுடன் தொட்டு பார்த்து மகிழ்ந்தனர். பூனைகளை பார்வையாளர்கள் தங்களது செல்போன்களில் படம் எடுத்தனர். கண்காட்சியில் சிறந்த பூனைகள் தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


Next Story