30 பன்றிகளை பிடித்து வெளியேற்றம் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு


30 பன்றிகளை பிடித்து வெளியேற்றம் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
x

செய்யாறில் 30 பன்றிகளை பிடித்து பணியாளர்கள் வெளியேற்றினர். அதனை கண்டித்து பன்றி உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் 30 பன்றிகளை பிடித்து பணியாளர்கள் வெளியேற்றினர். அதனை கண்டித்து பன்றி உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்யாறில் உள்ள திருவத்திபுரம் நகராட்சி பகுதியில் உள்ள வழுர்பேட்டை, திருவோத்தூர், கிரிதரன்பேட்டை, வேல் சோமசுந்தரம் நகர், அம்பேத்கர் நகர்,கம்பன் நகர் மற்றும் திருவள்ளுவர் நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பகுதியில் வசிக்கும் சிலர் சுமார் 500-க்கும் மேற்பட்ட பன்றிகளை வளர்த்து வருவதாக தெரிகிறது. இவ்வாறு வளர்க்கப்பட்டு வரும் பன்றிகள் அருகில் உள்ள நிலங்கள், வீட்டு தோட்டங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தி வருகின்றன. அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என நகர மன்ற கூட்டத்தின் போது பல்வேறு வார்டு கவுன்சிலர்கள் வலிியுறுத்தி இருந்தனர்.

அதன அடிப்படையில் நகர மன்ற தலைவர், நகராட்சி ஆணையாளர் ஆகியோர் உத்தரவின் பேரில், மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்ட 15 பேர் அடங்கிய பன்றிகளை பிடிக்கும் குழுவினர் பணியில் ஈடுபட்டு சுமார் 20-க்கும் மேற்பட்ட பன்றிகளை பிடித்து வேனில் ஏற்றினர்.

தகவல் அறிந்த பன்றி உரிமையாளர்கள் ஒன்று திரண்டு நகராட்சி துப்புரவு ஆய்வாளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். செய்யாறு போலீசார் விரைந்து வந்து பன்றி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நகராட்சி ஊழியர்களின் பணியை தடுக்க கூடாது எனவும், மேற்கொண்டு நகராட்சி ஆணையளரை அணுகி உங்களத கோரிக்கைகளைன தெரிவியுங்கள் என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பன்றிகளை பிடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று மொத்தம் 30 பன்றிகள் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு விடப்பட்டன. இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

=========


Next Story