மாட்டுச்சந்தை தொடக்கம்
பாவூர்சத்திரத்தில் மாட்டுச்சந்தை தொடங்கியது
தென்காசி
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரத்தில் அரசுக்கு சொந்தமான தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமையன்று ஆடுகள் மற்றும் கோழிகள் விற்பனை நடைபெற்று வருகிறது.
தற்போது முதன்முறையாக மாட்டுச் சந்தையும் தொடங்கப்பட்டுள்ளது. புதன்கிழமை தோறும் இச்சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளான நேற்று காலை சந்தை தொடங்கியது. ஏராளமான மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். ஆவுடையானூர், பொடியனூர், திப்பணம்பட்டி, குறும்பலாப்பேரி, கீழப்பாவூர், மேலப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் மாடு வாங்க வந்திருந்தனர். சிறிய கன்றுகள் ரூ.5 ஆயிரம் முதல் மாடுகள் ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து வாரந்தோறும் புதன்கிழமை மாட்டுச்சந்தை நடைபெற உள்ளதாகவும் கூறினர்.
Related Tags :
Next Story