நாட்டறம்பள்ளி அருகே மாடு முட்டி உரிமையாளர் சாவு
நாட்டறம்பள்ளி அருகே மாட்டை வருடிக்கொடுத்தபோது முட்டியதில் உரிமையாளர் இறந்தார்.
ஜோலார்பேட்டை
நாட்டறம்பள்ளி அருகே மாட்டை வருடிக்கொடுத்தபோது முட்டியதில் உரிமையாளர் இறந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த வெலக்கல்நத்தம் அருகே உள்ள சின்னகவுண்டனூர் பகுதியைச் சேர்ந்தவர் மேகநாதன் (வயது 52) இவர் தென்னை மரம் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.இவருக்கு ராணி மற்றும் மாங்கனி என்ற 2 மனைவிகளும், முதல் மனைவிக்கு ஒரு மகன், 2 மகள்களும் இரண்டாவது மனைவிக்கு ஒரு மகன் ஒரு மகனும் உள்ளனர்.
மேகநாதன் மாடு வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் காலை மேகநாதன் மாட்டை நீவிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென மாடு அவர் மீது பாய்ந்து முட்டியது. இதில் படுகாயம் அடைந்த அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு அவர் மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மேகநாதன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இது குறித்து இவரது மகன் சதீஷ் நேற்று காலை நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.