சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும்
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கால்நடைகள்
நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை நடக்கிறது.
இதையொட்டி தனி நபர் கவனிப்பாரின்றி சாலைகளிலும், புனித ஆரோக்கிய மாதா ஆலயத்திலும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் நாய், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். உரிமை கோராத கால்நடைகள் கோசாலையில் கொண்டுவிடப்படும்.
முத்திரையிடப்பட்ட இறைச்சிகள்
இறைச்சி விற்பனை செய்பவர்கள், நகராட்சி அலுவலர்கள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் பரிசோதனைக்கு பிறகு முத்திரை வைக்கப்பட்ட ஆடு, மாடு, இறைச்சிகளையே சுகாதார முறையில் விற்பனை செய்ய வேண்டும். முத்திரை வைக்காத இறைச்சி விற்பனை செய்பவர்கள் மீது மிருக வதை தடுப்பு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
எனவே பொதுமக்கள் முத்திரையிடப்பட்ட இறைச்சியை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். மேலும் அன்னதான கூடத்தில் சமைக்க பயன்படுத்தும் இறைச்சிகள், பரிசோதனை செய்து முத்திரை இடப்பட்ட பின்னரே உபயோகப்படுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.