காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: மேட்டூர் அணைக்கு வர்ணம் பூசும் பணி மும்முரம்
காவிரி டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படுகிறது. முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ளும் விழாவுக்காக மேட்டூர் அணை தயாராகி வருகிறது. அதற்காக வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடக்கிறது.
மேட்டூர்:
மு.க.ஸ்டாலின்
சேலம் அண்ணா பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள கருணாநிதி சிலை, சேலம் ஈரடுக்கு பஸ் நிலையம் திறப்பு விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நாளைமறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
இதில் கலந்து கொள்ள சேலம் மாவட்டத்துக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிறார்.
வர்ணம் பூசும் பணி
12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து விடுகிறார். அதற்காக மேட்டூர் அணைக்கு வர்ணம் பூசும் பணி நடக்கிறது.
அணையின் மேல் மட்ட மதகு மற்றும் கீழ்மட்ட மதகு உட்பட முக்கிய பகுதிகள் மற்றும் தண்ணீர் பாய்ந்து ஓடும் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதகுகளின் இயக்கத்தை சரிபார்க்கும் பணி, முக்கிய பகுதிகளில் வர்ணம் பூசம் பணி உட்பட பல்வேறு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.