காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க கூட்டம்


காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க கூட்டம்
x
தினத்தந்தி 14 April 2023 12:15 AM IST (Updated: 14 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

குத்தாலம், ஏப்.14- மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி புற்றடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க கிளைகள் அமைப்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குருகோபிகணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில் மதியழகன் முன்னிலை வகித்தார். செயலாளர் முட்டம் ராஜாராமன் வரவேற்றார். இதில் கடக்கம், அகர ஆதனூர், முத்தூர், கொடவிளாகம், கிளியனூர், அகர வல்லம், பெரம்பூர், எடக்குடி உள்ளிட்ட கிராமங்களில் காவேரி டெல்டா பாசனக்காரர் முன்னேற்ற சங்க கிளைகள் அமைக்கப்பட்டது. மேலும் கிளைகளுக்கான நிர்வாகிகளும் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த நிலக்கரி ஏலத்தை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. 100 நாள் வேலை திட்டத்தை விவசாய வேலைக்கு முழுமையாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் கடக்கம் பிரபாகரன் நன்றி கூறினார்.

மயிலாடுதுறை

குத்தாலம்:

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் ஆதனூர் ஊராட்சி புற்றடி மாரியம்மன் கோவில் வளாகத்தில் காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க கிளைகள் அமைப்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு காவேரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்க தலைவர் குருகோபிகணேசன் தலைமை தாங்கினார். பொருளாளர் செந்தில் மதியழகன் முன்னிலை வகித்தார். செயலாளர் முட்டம் ராஜாராமன் வரவேற்றார். இதில் கடக்கம், அகர ஆதனூர், முத்தூர், கொடவிளாகம், கிளியனூர், அகர வல்லம், பெரம்பூர், எடக்குடி உள்ளிட்ட கிராமங்களில் காவேரி டெல்டா பாசனக்காரர் முன்னேற்ற சங்க கிளைகள் அமைக்கப்பட்டது. மேலும் கிளைகளுக்கான நிர்வாகிகளும் அறிமுகப்படுத்தப்பட்டனர். கூட்டத்தில் காவிரி டெல்டா பகுதிகளில் மத்திய அரசு கொண்டுவந்த நிலக்கரி ஏலத்தை ரத்து செய்ய சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த தமிழக முதல்- அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பது. 100 நாள் வேலை திட்டத்தை விவசாய வேலைக்கு முழுமையாக பயன்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.முடிவில் கடக்கம் பிரபாகரன் நன்றி கூறினார்.


Next Story