நீர்மின் தேக்க கதவணை பராமரிப்பு பணி நிறைவு


நீர்மின் தேக்க கதவணை பராமரிப்பு பணி நிறைவு
x

கோனேரிப்பட்டியில் நீர்மின் தேக்க கதவணை பராமரிப்பு பணி நிறைவு பெற்றதால் மீண்டும் தண்ணீர் தேக்கியதால் காவிரி ஆறு கடல் போல காட்சியளிக்கிறது.

சேலம்

தேவூர்

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் செக்கானூர், நெருஞ்சிப்பேட்டை, கோனேரிப்பட்டி, ஊராட்சிக்கோட்டைஆகிய இடங்களில் உள்ள நீர் மின்தேக்க நிலைய பகுதிகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் நீர்மின் தேக்க கதவணைகள் ஒவ்வொன்றாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு 15 நாட்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் தேவூர் அருகே கோனேரிபட்டி நீர்மின் தேக்க கதவணை பகுதியில் அனைத்து கதவணை மதகுகளும் திறந்து தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு கடந்த 15 நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. இதனால் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றது. தற்போது மீண்டும் தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு இந்த கதவணை மின்நிலையத்தில் மின் உற்பத்தி தொடங்கி உள்ளது. மீண்டும் தண்ணீர் தேக்கப்பட்டதால், கதவணை பகுதி தேங்கி நிற்கும் தண்ணீர் காவிரி ஆறு கடல் போல காட்சியளிக்கிறது.


Next Story