காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
நன்செய் புகழூரில் காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த வாங்கல் பழனிசாமி தலைமை தாங்கினார். சண்முகம் முன்னிலை விகித்தார். புங்கோடை சுப்பிரமணியம் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் முகிலன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் காவிரி ஆற்றில் மணலே இல்லாத இடத்தில் மணல் குவாரி அமைக்க அனுமதி கொடுத்து, சட்டவிரோத மணல் குவாரிகளுக்காக (நன்னியூர், நெரூர் வடக்கு மல்லம்பாளையம்) போலியான முறைகேடான ஆவணங்களை தயாரித்துக் கொடுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டவிரோத மணல் குவாரிகள் இயங்க தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கொடுத்த இசைவாணை அனுமதியை ரத்து செய்ய வேண்டும்.நன்னியூர், நெரூர் வடக்கு, மல்லம்பாளையம் மணல் குவாரிக்கு கொடுத்த அனுமதியை ரத்து செய்யாவிட்டால், சட்ட ரீதியாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மணலே இல்லாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ள மணல் குவாரியை மூடும் வகையில் தீர்வு காண்பது.காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கம் நிறைவேற்றிய தீர்மானங்களை அரசு அதிகாரிகளுக்கு கொடுப்பதோடு, மக்கள் மத்தியில் பரப்புரையாக கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டது.இதில், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.