காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மாவட்ட ஆலோசனை கூட்டம்


காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மாவட்ட ஆலோசனை கூட்டம்
x

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மாவட்ட ஆலோசனை கூட்டம் நடந்தது.

கரூர்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய் திட்ட மாவட்ட குழுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கிருஷ்ணராயபுரம் வட்டம், அலகு-1-ல் சிந்தலவாடி, பிள்ளாபாளையம், கருப்பத்தூர் மற்றும் குளித்தலை வட்டம். அலகு-2-ல் மருதூர் தெற்கு-1, வைகைநல்லூர் தெற்கு, இரணியமங்கலம், சத்தியமங்கலம், இனுங்கூர் மற்றும் குளித்தலை வட்டம். அலகு-3-ல் தளிஞ்சி, நங்கவரம் தெற்கு-1, நெய்தலூர் தெற்கு மற்றும் ராச்சாண்டார் திருமலை ஆகிய 12 கிராமங்களுக்கு காவிரி - வைகை - குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்திற்கு நில எடுப்பிற்கு உட்படும் விஸ்தீரணம் 346.11.38 எக்டேர் புலங்களில் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீட்டுக்கான வரைவு திட்ட அறிக்கை மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு ஆட்சியர், குளித்தலை வருவாய் கோட்டாட்சியரால் வெளியிடப்பட்டது.

அது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டம் நிர்வாகி, மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு அலுவலரால் நடத்தப்பட்டு, அதனடிப்படையில் இறுதி செய்யப்பட்ட திட்ட அறிக்கையில் நிலமெடுப்பில் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு உரிமைக்கூறுகள் வழங்க பரிந்துரை செய்யப்பட்டதன் அடிப்படையில், நில உரிமையாளர்களுக்கு வழங்க வேண்டிய மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு இழப்பீடுகளை மறு ஆய்வு செய்து பரிசீலித்து ஒப்புதல் வழங்கி இறுதி செய்வது குறித்து மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்வுக்கான மாவட்ட குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு மாநில மறுவாழ்வு ஆணையருக்கு பரிந்துரை செய்ய ஏதுவாக மறுவாழ்வு மற்றும் மீள்குடியமர்வு திட்ட அறிக்கை இறுதி செய்யப்பட்டது என மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தெரிவித்தார்.


Next Story