சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கியது


சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கியது
x
தினத்தந்தி 25 Feb 2023 12:15 AM IST (Updated: 25 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நீலகிரி மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கியது.

நீலகிரி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு தொடங்கியது.

சி.பி.எஸ்.இ. பள்ளிகள்

மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின்(சி.பி.எஸ்.இ.) கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு, பிளஸ்-2 மாணவர்களுக்கு முக்கிய பாடங்களுக்கான பொதுத்தேர்வு நேற்று முதல் தொடங்கியது.

நீலகிரி மாவட்டத்தில் 10-ம் வகுப்புக்கு காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை தமிழ், தெலுங்கு, மராத்தி உள்ளிட்ட 8 மொழி பாடத்தேர்வு நடந்தது. வருகிற 27-ந் தேதி ஆங்கில பாடத்தேர்வு நடக்கிறது. அடுத்த மாதம்(மார்ச்) 21-ந் தேதி கணக்கு தேர்வுடன் நிறைவு பெறுகிறது.

பிளஸ்-2 பொதுத்தேர்வு

இதேபோன்று பிளஸ்-2 மாணவர்களுக்கு நேற்று ஆங்கில தேர்வுடன் முக்கிய பாட தேர்வுகள் தொடங்கின. வருகிற 28-ந் தேதி இயற்பியல் பாடத்தேர்வு நடக்கிறது. வருகிற ஏப்ரல் மாதம் 5-ந் தேதி உளவியல் பாடத்தேர்வுடன் நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு தேர்விற்கும் குறைந்தபட்சம் 4 நாட்கள் இடைவெளி கிடைக்கிறது. தேர்வு முடிந்ததும், மாணவர்களின் விடைத்தாள்கள் சென்னை, மண்டல அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படும். தேர்வு மையங்களில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன. மாணவர்களுக்கு தேர்வு விதிமுறைகள் குறித்து பள்ளிகளில் ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது என்றும், தேர்வுகளில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.


Next Story