கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர் கைது


கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவர் கைது
x
தினத்தந்தி 26 Feb 2023 12:30 AM IST (Updated: 26 Feb 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மணல்மேடு அருகே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

மயிலாடுதுறை

மணல்மேடு அருகே கண்காணிப்பு கேமராக்களை உடைத்தவரை போலீசார் கைது செய்தனர்.

கண்காணிப்பு கேமராக்கள்

மணல்மேடு அருகே உள்ள வில்லியநல்லூர் ஊராட்சியை சேர்ந்த பாலாகுடி பகுதியில் கொற்கை மெயின்ரோடு சந்திக்கும் இடத்தில் ஊராட்சியின் சார்பில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவு நேரத்தில் பாலாகுடி காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த சதாசிவம் மகன் அருண்குமார் (வயது22) என்பவர் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டிருந்த கம்பத்தை உலுக்கியதில், அதில் பொருத்தப்பட்டிருந்த 3 கண்காணிப்பு கேமராக்களும் கீழே விழுந்து உடைந்தன.

ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி

இதை வில்லியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் வீரமணி (42) என்பவர் தட்டிக்கேட்டபோது ஆத்திரமடைந்த அருண்குமார், அவரை திட்டி தாக்க முயன்றார்.

இதுகுறித்து வீரமணி மணல்மேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் மணல்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண்குமாரை கைது செய்தனர்.


Next Story