குற்றச்செயல்களை தடுக்க சி.சி.டி.வி. கேமரா
எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி ராயல் நகர் குடியிருப்பில் குற்றச்செயல்களை தடுக்க சி.சி.டி.வி. கேமராவை ேபாலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே எ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி ராயல் நகர் குடியிருப்பு பகுதியில் குடியிருப்போர் நலச்சங்கம் சார்பில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் ரத்தினவேலு தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் பழனிவேல், சுதாராணி, அருண்மொழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன், வெங்கடேஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டு அறையை திறந்து வைத்து பார்வையிட்டனர். பின்னர் அதன் பயன்பாடு குறித்து விளக்கி கூறினர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு வினோத், இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் பா.ம.க. நிர்வாகிகள் சண்முகம், கிருஷ்ணமூர்த்தி, வெங்கடேசன், சங்க சட்ட ஆலோசகர் செல்வராஜ் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.