சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி ஒயர் திருட்டு


சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி ஒயர் திருட்டு
x

சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்திவிட்டு மர்ம நபர்கள் ஒயரை திருடிச்சென்றனர்

மதுரை

திருமங்கலம்,

கள்ளிக்குடி அடுத்த ஆவல் சூரன்பட்டியை சேர்ந்தவர் பாண்டியராஜன்(வயது 55). இவர் நல்லமநாயக்கன்பட்டி பெருமாள் கோவில் அருகேயுள்ள நாகராஜன் என்பவரின் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தோட்டத்தில் இருந்த 30 மீட்டர் மோட்டார் ஒயரை திருடிய மர்ம நபர்கள் சி.சி.டி.வி. கேமராவை சேதப்படுத்தி எடுத்து சென்றது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.1 லட்சமாகும். இதுகுறித்து பாண்டியராஜன் கொடுத்த புகாரின்பேரில் கள்ளிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story