ஸ்ரீரங்கத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்


ஸ்ரீரங்கத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

ஸ்ரீரங்கத்தில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

திருச்சி

திருச்சி அந்தநல்லூர் ஒன்றிய சார்பில் குறுவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் 5 கட்டமாக நடைபெற்று வருகிறது.

இதில் இரண்டாம் கட்டமாக கபடி மற்றும் பூப்பந்தாட்ட போட்டி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. வாலிபால் போட்டி மேலூரில் உள்ள யூத் வாலிபால் அகடாமியில் நடந்தது. போட்டிகளுக்கு திருவானைக்காவல் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். போட்டிகளை ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன் தொடங்கி வைத்தார். இந்த விளையாட்டு போட்டிகள் 14வயது, 17வயது, 19வயது என மூன்று பிரிவுகளாக நடந்தன. இதில் கபடி போட்டியில் 45 அணிகளும், பூப்பந்தாட்டத்தில் 28அணிகளும், வாலிபால் போட்டியில் 32 அணிகள் விளையாடின.

இதில் பூப்பந்தாட்ட போட்டியில் 3 பிரிவுகளிலும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அணியினர் வெற்றி பெற்றனர். கபடி போட்டியில் 14வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் அகிலாப்பேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, 17 வயதிற்குட்டவர்கள் பிரிவில் திருப்பராய்த்துறை எஸ்.வி.மேல்நிலைப்பள்ளி, 19 வயதிற்குட்டவர்கள் பிரிவில் பெட்டவாய்த்தலை மேல்நிலைப்பள்ளி அணியும் வெற்றிப்பெற்றது. வாலிபால் போட்டியில் 14 மற்றும் 17 வயதிற்குட்பட்டோர் பிரிவில் மேலூர் அய்யனார் உயர்நிலைப்பள்ளி, 19 வயதிற்குட்பட்டோர் பிரிவில் பெட்டவாய்த்தலை சேவை சாந்தி மெட்ரிக்பள்ளி அணியும் வெற்றிப்பெற்றது. போட்டிகளுக்கு உடற்கல்வி ஆசிரியர்கள் சண்முகம், சேதுமணிமாறன், வீரபத்திரன், கார்த்திக், ஜெகதீசன், சண்முகசுந்தரம், ஆசிரியர்கள் மாரியப்பன், அன்பழகன் ஆகியோர் நடுவராக செயல்பட்டனர்.

இந்தபோட்டிகளில் வெற்றிப்பெற்றவர்கள் மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர். இறுதி போட்டியில் வெற்றிப்பெறுபவர்களுக்கு பள்ளி கல்வித்துறை சார்பில் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.


Next Story