குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்


குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள்
x

கோத்தகிரியில் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடந்தது.

நீலகிரி

கோத்தகிரி,

கோத்தகிரி மிளிதேன் அரசு உயர்நிலைப்பள்ளி சார்பில், குன்னூர் குறுவட்ட அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின விளையாட்டு போட்டிகள் பள்ளிகளுக்கு இடையே கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடந்து வருகிறது. பள்ளி தலைமை ஆசிரியர் அரவிந்தன், குறுவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் மேற்பார்வையில் நடக்கிறது. இதில் 45 அரசு மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். நேற்று பெண்களுக்கான 14, 17, 19 வயது உட்பட்டோருக்கான கால்பந்து போட்டிகள் நடைபெற்றது. 17 வயது உட்பட்டோருக்கான இறுதிப்போட்டியில் குன்னூர் ஜோசப் கான்வென்ட் அணியும், கே.என்.எம் கேத்தி பாலாடா பள்ளி அணியும் மோதியது. இதில் குன்னூர் ஜோசப் கான்வென்ட் பள்ளி அணி 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 14, 19 வயது உட்பட்டோருக்கான பெண்கள் கால்பந்து போட்டியிலும் குன்னூர் ஜோசப் கான்வென்ட் பள்ளி அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் நீலகிரி மாவட்ட அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றது.



Next Story