திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா


திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா
x
தினத்தந்தி 28 Sept 2022 12:15 AM IST (Updated: 28 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் ஆதித்தனார் கல்லூரி நிர்வாகம் சார்பில் சி.பா.ஆதித்தனார் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

'தமிழர் தந்தை' சி.பா.ஆதித்தனாரின் 118-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மேலும் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் வசுமதி சி.பா.ஆதித்தனாரின் சிறப்புகள் குறித்து பேசினார்.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமாஜ், செயலாளர் நாராயணராஜன், ஆதித்தனார் கல்லூரி செயலாளர் ஜெயகுமார், கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் ஒய்சிலின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி முதல்வர் சாம்ராஜ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரியசெசிலி, பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைக்குருசெல்வி, சிவந்தி அகாடமி ஒருங்கிணைப்பாளர் முத்தையாராஜ் மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.


Next Story