புகை மூட்டம் இல்லாத போகிப் பண்டிகையை கொண்டாடுங்கள் - சென்னை விமான நிலையம் வேண்டுகோள்


புகை மூட்டம் இல்லாத போகிப் பண்டிகையை  கொண்டாடுங்கள் -  சென்னை விமான நிலையம் வேண்டுகோள்
x

போகிப் பண்டிகையை புகையில்லாமல் கொண்ட வேண்டும் என்றும் சென்னை விமான நிலையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

ஆலந்தூர்,

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான வருகிற 14-ந்தேதி போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. போகிப் பண்டிகை அன்று வீட்டை சுத்தம் செய்து பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். சென்னை புறநகர் பகுதிகளில் கடந்த சில ஆண்டுகளாக அதிக அளவு பிளாஸ்டிக் பொருட்கள், ரப்பர் உள்ளிட்டவை எரிக்கப்படுவதால் புகை மூட்டம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. அதிகாலை நேரத்தில் பனியுடன் புகையும் சேர்வதால் அடர்ந்த புகையின் காரணமாக விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம் ஆனது.

இதையடுத்து போகிப் பண்டிகையை புகையில்லாமல் கொண்ட வேண்டும் என்றும் சென்னை விமான நிலையம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:- புகை மூட்டம் இல்லாத போகியைக் கொண்டாடுங்கள். ஏனெனில் அடர் மூடு பனியில் கரும்புகை கலந்தால், அந்த காற்று மாசு விமான நிலையத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பார்வை நிலையை வெகுவாகக் குறைத்து, விமான செயல்பாடுகளை பாதிக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story