நெல்லையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


நெல்லையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து நெல்லையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருநெல்வேலி

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதையடுத்து நெல்லையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

நெல்லை

கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதை தொடர்ந்து நெல்லை மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி அலுவலகம் முன்பு மாநகர மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் தலைமையில் நிர்வாகிகள் காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு மாலை அணிவித்து, மேளதாளம், வாணவேடிக்கை முழங்க பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

மாநில வக்கீல் பிரிவு இணை தலைவர் மகேந்திரன், தென்காசி மாவட்ட பொருளாளர் முரளிராஜா, தனசிங் பாண்டியன், மகளிர் அணி மாவட்ட தலைவி ஸ்டெல்லா மேரி, துணை தலைவி மெட்டில்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பரப்பாடி

இதே போன்று பரப்பாடியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். முன்னாள் மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் டபிள்யு.ராஜாசிங், மாநில ஓ.பி.சி. பிரிவு துணைத்தலைவர் ஜெஸ்கர்ராஜா, வட்டார காங்கிரஸ் தலைவர் ராமஜெயம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஜேக்கப்பாண்டி, சாலமோன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பணகுடி

பணகுடி பஸ் நிலையம் முன்பு நகர காங்கிரஸ் சார்பாக நகர தலைவர் எட்வின் தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அம்பை

அம்பையில் நகர காங்கிரஸ் சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

நகர காங்கிரஸ் தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் இருதயராஜ், நகர பொருளாளர் அர்ஜுனன், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், ஜான் சவரிமுத்து, நிர்வாகிகள் சிவாஜி செல்லப்பா, நஜிமுதீன், மாரியப்பன், ஸ்டீபன், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story