பா.ம.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


பா.ம.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x

விவசாயிகளுக்கு கரும்பு நிலுவைத்தொகை வழங்க நடவடிக்கை எடுத்ததற்கு பா.ம.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் பா.ம.க.வின் தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தினர் கரும்பு விவசாயிகளுக்கு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை வழங்க வேண்டிய ரூ.32 கோடி நிலுவைத் தொகையை தராமல் காலம் தாழ்த்தி வருவதை கண்டித்து

பா.ம.க மாவட்ட செயலாளர் கனேஷ்குமார், உழவர் பேரியக்க மாநில செயலாளர் வேலுச்சாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 11-ந்தேதி அன்று ஆலையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத் தொகையை விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதையடுத்து செய்யாறு பஸ் நிலையம் அருகில் பா.ம.க. மாவட்ட தலைவர் தீ.கா.சீனிவாசன் தலைமையில் மாவட்ட அமைப்பு செயலாளர் வெள்ளை குளம் ஏழுமலை, மாநில செயற்குழு உறுப்பினர் தி.க.காத்தவராயன், கி.ஜெய்சங்கர், பொதுக்குழு உறுப்பினர் நடராஜன், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் பா.ம.க.வினர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


Next Story