பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்புஅ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
பரமக்குடி,
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பு ஏற்றுக்கொண்டதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
இனிப்பு வழங்கினர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுள்ளார். அதையொட்டி ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் எம்.ஏ. முனியசாமி, மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் கீத்திகா முனியசாமி ஆகியோரது ஆலோசனையின் பேரில் பரமக்குடி பஸ் நிலையம் உள்பட பல்வேறு பகுதிகளில் அ.தி.மு.க.வினர் இனிப்புகள் வழங்கியும் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்த நிகழ்ச்சிக்கு பரமக்குடி நகர் ஜெயலலிதா பேரவை செயலாளரும், நகர்மன்ற உறுப்பினருமான வடமலையான் தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் முத்தையா இனிப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பிரதிநிதி கனகராஜ், நகர் ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளர் கார்த்திக், நிர்வாகிகள் மருதுபாலா, பகை வென்றி முருகேசன், நாகராஜன், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முதுகுளத்தூர்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இதை முதுகுளத்தூரில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். நகரச் செயலாளர் சங்கரபாண்டியன், மாநில விவசாய அணி இணைச் செயலாளர் கர்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.
இதில் அவைத்தலைவர் கருப்பசாமி, முதுகுளத்தூர் ஒன்றிய துணைச் செயலாளர் முத்துராமலிங்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் கதிரேசன், அண்ணா தொழிற்சங்க செயலாளர் விளங்குளத்தூர் முத்துவேல், மாவட்ட இளைஞர் அணி துணைத் தலைவர் அம்சராஜ், கொழுந்துறை ஊராட்சி மன்ற தலைவர் தஸ்ரின்பானு கனகராஜ், முன்னாள் ஆணையாளர் கண்ணன், கிளைச் செயலாளர் டிரைவர் குருசாமி, முத்து மணி, இளங்கோ, மலைக்கள்ளன், முன்னாள் ஜெயலலிதா பேரவை செயலாளர் வீமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.