சேலத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


சேலத்தில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 1:00 AM IST (Updated: 29 March 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
சேலம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை வரவேற்று சேலத்தில் மாநகர் மாவட்ட செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நேற்று போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அவர் சென்னையில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பொதுச்செயலாளராக பதவியேற்று கொண்டார். இதை வரவேற்று சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ஜி.வெங்கடாஜலம் தலைமையில் நிர்வாகிகள் ஏராளமானவர்கள் 4 ரோடு அருகே உள்ள அண்ணா பூங்கா முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பின்னர் அவர்கள் அண்ணா பூங்கா மணிமண்டபத்தில் உள்ள எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதையடுத்து ஜி.வெங்கடாஜலம் அந்த வழியாக வந்த பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கினார். மேலும் அங்கு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆட்டம் ஆடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

கலந்து கொண்டவர்கள்

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ. எம்.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பொருளாளர் பங்க் வெங்கடாசலம், கூட்டுறவு சங்க தலைவர்கள் ஜான் கென்னடி, வேபிரிட்ஜ் ராஜேந்திரன், சுந்தரபாண்டியன், மாநகர மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் நெப்போலியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story