தேசிய அஞ்சலக வார விழா கொண்டாட்டம்
ஆரணியில் தேசிய அஞ்சலக வார விழா கொண்டாடப்பட்டது.
ஆரணி
ஆரணி தச்சூர் சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய வளாகத்தில் தேசிய அஞ்சலக வார விழா கொண்டாடப்பட்டது.
இதைமுன்னிட்டு அஞ்சலக சேவைகள் விளக்கும் வகையில் அஞ்சல் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
திருவண்ணாமலை கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து தங்கமகள் சேமிப்பு திட்டத்தில் சேமிப்பு கணக்கு தொடங்கப்பட்டவர்களுக்கு புத்தகங்களை வழங்கினார்.
அவர் கூறுகையில் தேசிய அஞ்சலக வார விழா 9-ந் தேதி முதல் 13-ந் தேதி வரை நடத்த தபால் துறை முடிவு செய்துள்ளது. 13-ந் தேதி வரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் தபால் சேவை குறித்து துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்படும்.
தங்க நகை முதலீட்டுக்கான சேமிப்பு பத்திரம் அதிக லாபம் தரக்கூடிய திட்டமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது அதில் மக்கள் ஆர்வம் காட்ட வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட உதவி கோட்ட கண்காணிப்பாளர்கள் ஆர்.ரங்கராஜன், சுவாமிநாதன், ஆரணி உதவி கோட்ட கண்காணிப்பாளர் கார்த்திகேயன்,
போளூர் அஞ்சல் ஆய்வாளர் சுந்தரவடிவேல், ஆரணி தலைமை அஞ்சல் அதிகாரி ந.சீனுவாசன், உதவி அஞ்சலக அலுவலர்கள் தேவபாலன், துரைராஜன், சிவக்குமார், கணக்கு பிரிவு அலுவலர் ஜான்சிராணி மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர்.