செவல் கண்மாயை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்


செவல் கண்மாயை ஆக்கிரமித்த ஆகாய தாமரைகள்
x

அருப்புக்கோட்டைசெவல் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டைசெவல் கண்மாயில் வளர்ந்துள்ள ஆகாய தாமரைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செவல் கண்மாய்

அருப்புக்கோட்டையில் சின்ன புளியம்பட்டி, நெசவாளர் காலனி, வீரலட்சுமி நகர், மணி நகரம், சண்முகநாதபுரம் ஆகிய பகுதி மக்களின் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக செவல் கண்மாய் விளங்கி வருகிறது. தற்போது இந்த கண்மாய் முழுவதும் ஆகாயத்தாமரை செடிகள் சூழ்ந்து காணப்படுகிறது.

சில இடங்களில் கண்மாய் ஆக்கிரமிப்பும் காணப்படுகிறது. மேலும் கண்மாய் முழுவதும் கழிவுநீர் கலந்து நீர் மாசடைந்து வருகிறது. எனவே முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் செவல் கண்மாயை தூர்வார வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நிலத்தடி நீர் ஆதாரம்

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

சின்ன புளியம்பட்டி, நெசவாளர் காலனி, வீரலட்சுமி நகர், மணி நகரம், சண்முகநாதபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களுக்கு முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக செவல் கண்மாய் விளங்கி வருகிறது.

தற்போது இந்த கண்மாய் இருப்பதே தெரியாத அளவிற்கு ஆகாயதாமரை செடிகள் வளர்ந்துள்ளன. மேலும் இந்த கண்மாயில் கழிவுநீர் கலப்பதால் நீரின் தன்மை மாறுபடுவதுடன், துர்நாற்றமும் வீசுகிறது. எனவே

ஆகாயத்தாமரை செடிகளை முழுவதும் அகற்றி, கழிவு நீர் கலக்காமல் நடவடிக்கை எடுப்பதுடன் கண்மாயை தூர்வார வேண்டும். கண்மாயை சுற்றி பூங்கா அமைத்து சுற்றுலாத்தலம் போல் மாற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story