பெண்ணை தாக்கி செல்போன் பறித்த 2 வாலிபர்கள் சிக்கினர்


பெண்ணை தாக்கி செல்போன்  பறித்த   2 வாலிபர்கள் சிக்கினர்
x

உடன்குடியில் பெண்ணை தாக்கி செல்போன் பறித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

உடன்குடியில் மோட்டார் சைக்கிளில் வந்து பெண்ணை தாக்கி செல்போனை பறித்துச் சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

வியாபாரி

உடன்குடி வடக்கு காலன்குடியிருப்பைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். வியாபாரி இவர் சென்னை புழல் பகுதியில் இரும்புக்கடை வைத்துள்ளார். தற்போது வடக்கு காலன் குடியிப்பில் நடைபெறும் கோவில் திருவிழாவிற்கு அவரது மனைவி லிங்கேஸ்வரி (42) மற்றும் குடும்பத்தினருடன் வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த 17-ந்தேதி மதியம் வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க லிங்கேஸ்வரி காலன்குடியிருப்பு ரோட்டிலிருந்து பிசகுவிளை செல்லும் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

பெண்ணை தாக்கி...

அப்போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென்று லிங்கேஸ்வரியை தாக்கினர். இதில் நிலைகுலைந்து கீழேவிழுந்த அவர் கையிலிருந்த செல்போனை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

2 வாலிபர்கள் கைது

இந்த விசாரணையில், செல்போனை பறித்துச் சென்றது மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள சத்யாநகரைச் சேர்ந்த ஐயப்பன் மகன் மாயாண்டிசுடலை (22), அவரது நண்பர் நெல்லை சமாதானபுரம் சாந்திநகரைச் சேர்ந்த அழகர் மகன் சக்திவேல் (21) என்பதும் தெரியவந்தது. நேற்று குலசேகரன்பட்டினம் போலீசார் அந்த 2 பேரையும் கைது செய்தனர். அவர்கள் வழிப்பறிக்கு பயன்படுத்தி வந்த ்மோட்டார் சைக்கிள் மற்றும் செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story