செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது


செல்போன் பறிப்பு; 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது
x

செல்போன் பறித்த 2 சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி, சுப்பிரமணியபுரம், பழைய பாண்டியன் தெருவை சேர்ந்தவர் ஜான் ஜெரால்டு செல்வகுமார். இவருடைய மகன் ஆண்டனி அபிஷேக் (வயது 21). இவர் சம்பவத்தன்று வீட்டின் அருகில் நின்று செல்போன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் அவருடைய செல்போனை பறித்து சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். இதில் அதே பகுதியை சேர்ந்த ஜெட்லி ஆண்ட்ரூஸ் (19) மற்றும் 2 சிறுவர்கள் செல்போனை பறித்து சென்றது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story