ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு


ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன்-பணம் பறிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2022 12:15 AM IST (Updated: 11 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன்-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன்-பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆட்டோ டிரைவர்

கிருஷ்ணகிரி தாலுகா கல்லகுறுக்கி அருகே உள்ள கொல்லம்பட்டியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 23). ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 8-ந் தேதி இரவு ஆட்டோவில் கிருஷ்ணகிரி நோக்கி வந்து கொண்டு இருந்தார். கல்லகுறுக்கி அருகே வந்த போது அந்த வழியாக சென்ற மர்ம நபர்கள் 4 பேர் ஆட்டோவை வழிமறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் டிரைவருடன் தகராறு செய்தனர். தொடர்ந்து அந்த நபர்கள், அவரை தாக்கி, செல்போன் மற்றும் ரூ.600 ஆகியவற்றை பறித்து சென்றனர். இதில் காயம் அடைந்த பார்த்திபன் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் மகராஜகடை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

வாலிபர் கைது

அப்போது ஆட்டோ டிரைவரை தாக்கி செல்போன், பணம் பறித்தது கே.பூசாரிப்பட்டியை சேர்ந்த தனசேகர் (வயது 22), கார்த்திக் (20), கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல் தெரு அசோக் (22) மற்றும் ஒருவர் என தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தனசேகரை கைது செய்தனர். தொடர்ந்து மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story