வாலிபரிடம் செல்போன், நகை பறிப்பு


வாலிபரிடம் செல்போன், நகை பறிப்பு
x

வாலிபரிடம் செல்போன், நகை பறிப்பு

ராமநாதபுரம்

ராமநாதபுரம் அச்சுந்தன்வயலை சேர்ந்தவர் கூரிசெல்வம்(வயது41). வெளிநாட்டில் இருந்து சமீபத்தில் இங்கு வந்த இவர் மதுரை-ராமநாதபுரம் நெடுஞ்சாலையில் இடையர்வலசை பெட்ரோல் பங்க் அருகே மோட்டார் சைக்கிளில் சாலையோரம் நின்று போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற 3 மர்ம நபர்கள் கூரிசெல்வம் போனில் பேசிக்கொண்டிருப்பதை கவனித்துள்ளனர். அவர்கள் கூரிசெல்வம் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த 2½ பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துக்கொண்டு சென்று விட்டனர். இதுகுறித்து கூரிசெல்வம் கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் பஜார் போலீஸ் இன்ஸ்பெக்டர் மருதுபாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாச நாராயணன் ஆகியோர் வழக்கு பதிந்து நகை பறித்து விட்டு தப்பிய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


Next Story