சேலம் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்


சேலம் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
x
தினத்தந்தி 10 Jun 2023 12:15 AM IST (Updated: 10 Jun 2023 3:09 PM IST)
t-max-icont-min-icon

சேலம் சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

சேலம்

சேலம் மத்திய சிறையில் கைதிகள் அறையில் நேற்று சோதனை குழுவினர் சோதனை நடத்தினர். அப்போது நாமக்கல் மாவட்டம் பாய்ச்சல் பகுதியை சேர்ந்த தண்டனை கைதியான ஆனந்த் (வயது 34) என்பவரது அறையில் சோதனை நடத்தப்பட்டது. இதில் துணிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போன் ஒன்றை குழுவினர் பறிமுதல் செய்தனர். அவருக்கு செல்போன் எப்படி கிடைத்தது? என்பது தொடர்பாக வார்டர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செல்போன் பறிமுதல் தொடர்பாக அஸ்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.



Next Story