திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல்
திருச்சி மத்திய சிறையில் கைதியிடம் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.
திருச்சி
திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1,300 போ் அடைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மத்திய சிறையில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பிளாக் எண் 20-ல் ஒரு அறையில் அடைக்கப்பட்டு இருந்த கள்ளக்குறிச்சி சங்கராபுரம் எஸ்.வி.பாளையத்தை சேர்ந்த ராமலிங்கம் (வயது 56) என்ற கைதியிடம் செல்போன் இருந்தது தெரியவந்தது. இவர் கள்ளக்குறிச்சியில் மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக நடந்த கலவரத்தில் கைது செய்யப்பட்டவர் ஆவார். இதையடுத்து ராமலிங்கத்திடம் இருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். இது குறித்து சிறை அலுவலர் சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின்பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story