புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, கஞ்சா பறிமுதல்..!
புழல் சிறையில் கைதிகளிடம் இருந்து செல்போன், சிம்கார்டு, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை
சென்னை,
புழல் சிறை சென்னை அருகே திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது ஆசியாவிலேயே மிகப்பெரிய சிறை வளாகம் என்ற பெயரை புழல் சிறை பெற்றுள்ளது. புழல் சிறையில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். சிறையில் போலீசார் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், புழல் சிறையில் காவலர்கள் நேற்று நடத்திய வழக்கமான சோதனையில் விஜயராஜ் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த செல்போன், 2 பேட்டரிகள், சிம்கார்டு பறிமுதல் செய்துள்ளனர். மேலும் கொடியரசன் என்ற கைதி படுக்கையில் மறைத்து வைத்திருந்த 20 கிராம் கஞ்சா பறிமுதல் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து இருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story