ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் திருட்டு


ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 21 April 2023 12:15 AM IST (Updated: 21 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆஸ்பத்திரி பெண் ஊழியரிடம் செல்போன் திருட்டு

விருதுநகர்


விருதுநகர் மேல தெருவை சேர்ந்தவர் சாந்தி(வயது 48). அப் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கணக்கராக வேலை பார்க்கும் இவர் சம்பவத்தன்று இரவு பலசரக்குப் பொருட்களை வாங்கி விட்டு விருதுநகர் பெ. சிதம்பரம் தெரு வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். இதில் நிலைகுலைந்த அவர் பலசரக்கு பொருட்களையும், தனது செல்போனையும் அங்கே மூடியிருந்த ஒரு கடை முன் வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார், அருகில் நின்ற 20 வயது மயக்கத்தக்க வாலிபர் ஒருவர் சாந்தியின் செல்போனை எடுத்துச் சென்று விட்டதாக கூறப்படுகிறது, இதுபற்றிய புகாரின் பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


Next Story