வாலிபரிடம் செல்போன் திருட்டு


வாலிபரிடம் செல்போன் திருட்டு
x

வாலிபரிடம் செல்போன் திருடிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள மிட்டாதார்குளம் எஸ்தாக்கியார் நகரை சேர்ந்தவர் மார்க் கிளாட்வின் (வயது 26). இவர் திசையன்விளை சந்தையில் வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு, அவரது செல்போனை பொருட்களை வைத்து இருந்த கட்டை பையில் வைத்து இருந்தார். திசையன்விளை பஸ் நிலையத்தில் வைத்து அவரது செல்போனை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து திசையன்விளை போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.


Next Story