தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் செல்போன் பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் மோட்டார் சைக்கிளில் வந்து செல்போனை பறித்து சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
தொழிலாளி
தென்காசியை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் மாடசாமி. தொழிலாளி. இவர் தூத்துக்குடியில் தங்கி இருந்து கூலி வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று தூத்துக்குடி- பாளையங்கோட்டை ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தாராம். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த தூத்துக்குடி இந்திராநகரை சேர்ந்த பிரெட்லி (21) மற்றும் 17 வயது வாலிபர் ஆகிய 2 பேரும் சேர்ந்து மாடசாமியை வழிமறித்து மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச்சென்று விட்டார்களாம்.
2 பேர் சிக்கினர்
இது குறித்து மாடசாமி கொடுத்த புகாரின் பேரில் மத்தியபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அந்த வழிப்பறி திருடர்களை பிடிக்க போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கியப்பன் மற்றும் போலீசார் கொண்ட தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதில் பிரெட்லி உள்ளிட்ட 2 வாலிபர்களையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து செல்போனையும் மீட்டனர்.