விளாத்திகுளத்தில்செல்போன் கோபுரம் மாயம்: போலீசார் விசாரணை
விளாத்திகுளத்தில்செல்போன் கோபுரம் மாயமானதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அம்பாள் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). விளாத்திகுளம் காமராஜ் நகர் பகுதியில் இவருக்கு சொந்தமான நிலத்தில் கடந்த 2003-ஆம் ஆண்டு தனியார் தொலை தொடர்பு நிறுவனம் சார்பில் செல்போன் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 20 வருடங்கள் ஒப்பந்தம் போடப்பட்டு ரூ.20 லட்சம் அந்த நிறுவனம் சார்பில் கொடுக்கப்பட்டதாம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் ஆய்வு செய்ய வந்த போது அந்த செல்போன் கோபுரத்தை காணவில்லையாம். இதுகுறித்து தனியார் தொலைதொடர்பு நிறுவன மேலாளர் ராஜன் கொடுத்த புகாரின் பேரில் விளாத்திகுளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசு வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story