ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு


ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு
x
தினத்தந்தி 18 Sept 2022 12:30 AM IST (Updated: 18 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

ரூ.25 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மீட்பு

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி குற்றங்களை தடுக்க வாகன சோதனை, ரோந்து பணியை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இதேபோல் குற்ற வழக்குகளை விசாரிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இருக்கின்றன. இதற்கிடையே மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்போன்கள் திருடு போனதாக புகார்கள் வந்தன.

இதை தொடர்ந்து திருடு போன செல்போன்களை கண்டுபிடிக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மீனா, சப்-இன்ஸ்பெக்டர் அருண்நாராயணன் மற்றும் போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் திருடு மற்றும் காணாமல் போன செல்போன்களின் ரகசிய எண்களை கொண்டு விசாரித்தனர். இதன் மூலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திருடு மற்றும் காணாமல் போன 105 செல்போன்களை போலீசார் மீட்டனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும். இதையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் கலந்து கொண்டு செல்போன்களை, உரிமையாளர்களிடம் வழங்கினார்.


Next Story