கெலமங்கலம் அருகே விவசாயியை தாக்கி செல்போன் பறிப்பு


கெலமங்கலம் அருகே  விவசாயியை தாக்கி செல்போன் பறிப்பு
x

கெலமங்கலம் அருகே விவசாயியை தாக்கி செல்போன் பறித்து சென்றவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி

ராயக்கோட்டை:

கெலமங்கலம் அருகே உள்ள சூடுகொண்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ் (வயது 40). விவசாயியான இவர் தேன்கனிக்கோட்டை சென்று மருந்து வாங்கி கொண்டு மோட்டார் சைக்கிளில் மீண்டும் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரை வழிமறித்த 4 பேர் பீர்பாட்டிலில் தாக்கி செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story