ரூ.11 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை
மல்லிநாயனப்பள்ளி, காட்டிநாயனப்பள்ளியில்ரூ.11 லட்சத்தில் கழிவுநீர் கால்வாய், சிமெண்டு சாலை அமைக்கும் பணியை அசோக்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
கிருஷ்ணகிரி ஒன்றியம் மல்லிநாயனப்பள்ளி கிராமத்தில் ரூ.5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கான பணியை கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ. பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். அப்போது கிராம மக்கள் எம்.எல்.ஏ.விடம், ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் ஆழ்துளை கிணறு மூழ்கி கிராமத்திற்கு சீராக குடிநீர் வினியோகம் செய்யவில்லை. ஏரியில் தண்ணீர் நிரம்பியதால் கிராமத்திற்கு செல்லும் சாலை நீரில் மூழ்கியுள்ளது. எனவே சாலையை உயர்த்தி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதற்கு விரைவில் குடிநீர் சீராக வினியோகம் செய்யவும், சாலையை உயர்த்தி சிமெண்டு சாலை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதேபோல கிருஷ்ணகிரி காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி 3-வது வார்டு மேல்கரடிகுறி கிராமத்தில் ரூ.5 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பில், சமத்துவ சுடுகாட்டிற்கு சிமெண்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடந்தது. இதில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் அப்பகுதியில் உள்ள குறைகளையும் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சியில், கிழக்கு ஒன்றிய செயலாளர் கன்னியப்பன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி, ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள் நாராயணகுமார், லட்சுமி மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.