சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்


சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விளாத்திகுளம் அருகே சிமெண்டு சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி

எட்டயபுரம்:

விளாத்திகுளம் அருகே உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.13.43 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்டு சாலை மற்றும் வாறுகால் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. விளாத்திகுளம் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்துக்குமார் தலைமை தாங்கினார். தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் அய்யன் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜையை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மந்திகுளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துராமலிங்கம், தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளர்கள் இமானுவேல், மகேந்திரன், தகவல் தொழில் நுட்ப அணி மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக விளாத்திகுளம் அருகே உள்ள மேல்மாந்தை பெத்தனாட்சி அம்மன் கோவில் உற்சவ விழாவை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி போட்டியை மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.


Next Story