ஈரோடு சூரம்பட்டி வலசு மயானத்தை சுத்தம் செய்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்


ஈரோடு சூரம்பட்டி வலசு மயானத்தை சுத்தம் செய்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்
x
தினத்தந்தி 14 Nov 2022 12:15 AM IST (Updated: 14 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு சூரம்பட்டி வலசு மயானத்தை சுத்தம் செய்த நெடுஞ்சாலைத்துறை பணியாளர்கள்

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 3-ம் மண்டலத்தில் சூரம்பட்டி வலசு மயானம் உள்ளது. தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மக்கள் இயக்க பணியின் கீழ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் மயானத்தில் உள்ள முட்புதர்கள், குப்பைகள், வழித்தடங்களை நேற்று சுத்தம் செய்தனர்.

இதுகுறித்து மாநில தலைவர் சண்முகராஜா கூறும்போது, '2002-ம் ஆண்டு சாலைப்பணியாளர்கள் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, பல்வேறு போராட்டங்களை நடத்தி, 2006-ம் ஆண்டு மீண்டும் எங்களை அரசு பணியில் சேர்த்துக்கொண்டது. எங்களது போராட்டத்திற்கு உறுதுணையாக இருந்த மக்களுக்கு, நாங்கள் எங்களது விடுமுறை நாட்களில், பள்ளிக்கூடம், மக்கள் பயன்படுத்தும் இடங்கள், மயானம் போன்றவற்றை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.

அதன்படி இன்று (அதாவது நேற்று) சூரம்பட்டிவலசு மயானத்தினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டோம்' என்றார்.


Next Story