மயான வசதி இல்லாததால் மக்கள் அவதி


மயான வசதி இல்லாததால் மக்கள் அவதி
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

இளையான்குடி அருகே மயான வசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

சிவகங்கை

இளையான்குடி,

இளையான்குடி அருகே மயான வசதி இல்லாததால் மக்கள் அவதியடைந்துள்ளனர்.

மயான வசதி

இளையான்குடி அருகே உள்ளது கீழாயூர் காலனி. இப்பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு மயானம் வசதி இல்லை. இதன் காரணமாக இங்கு இறப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய இடம் இல்லாமல் இளையான்குடி கண்மாயில் உள்ள தனியார் நிலத்தை மயானமாக பயன்படுத்தி வருகின்றனர். தனியார் நிலத்தை சேர்ந்தவர்களும் பயன்பாடுகள் இன்றி அந்த நிலம் கிடப்பதால் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் உள்ளது என பொதுமக்கள் கூறுகின்றனர்.

இது சம்பந்தமாக இளையான்குடி தாசில்தார் மற்றும் மாவட்ட வருவாய் கோட்டாட்சியர்களிடம் பலமுறை நேரடியாகவும், மனுக்கள் மூலமாகவும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர்.

பொதுமக்கள் கோரிக்கை

மேலும் இளையான்குடி கண்மாயில் உள்ள மயானத்திற்கு செல்ல தகுந்த வழித்தடங்கள் இல்லாததால் இடுப்பளவு தண்ணீரில் இறந்தவர்களை தூக்கி சென்று இறுதி சடங்குகள் செய்து வருகின்றனர். கடந்த 10-ந் தேதி உடல் நலக்குறைவால் இறந்த ஒருவரை இடுப்பளவு தண்ணீரில் சுமந்து சென்று இறுதி சடங்குகளை செய்தனர்.

பட்டியல் இனத்தை சேர்ந்த மக்களுக்கு மயானத்துக்கு இதுவரை இடம் ஒதுக்காததால் தனியார் நிலத்தை பயன்படுத்துகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் மயானத்துக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story