பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம்
மழையூரில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் கிழக்கு, மேற்கு மற்றும் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பில் மழையூர் கிராமத்தில் கமலக்கண்ணன் திடலில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு நிறைவு விழா பொதுக்கூட்டம் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.சீதாபதி முன்னிலை வகித்தார். தெள்ளார் மத்திய ஒன்றிய செயலாளர் டி.டி.ராதா, தெள்ளார் கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோவன், மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தரேசன் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் எம்.எஸ்.தரணிவேந்தன், அம்பேத்குமார் எம்.எல்.ஏ., தலைமை கழக பேச்சாளர்கள் கந்திலி கரிகாலன்,|போடி காமராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. பாண்டுரங்கன், மணியன், பாலஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு தி.மு.க. அரசின் சாதனைகளை குறித்தும், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 இடங்களில் வெற்றி பெறுவதற்கு முழுமையாக பாடுபட வேண்டும் என்று பேசினார்கள்.
இதில் தெள்ளார் ஒன்றியக்குழு தலைவர் கமலாட்சி இளங்கோவன், பெரணமல்லூர் நகர செயலாளர் வேணி ஏழுமலை, வந்தவாசி நகராட்சி தலைவர் ஜலால், தேசூர் பேரூராட்சி தலைவர் ராதா ஜெகவீர பாண்டியன், மாவட்ட கவுன்சிலர் புஷ்பா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், பிற அணி பொறுப்பாளர்கள், கிராம கிளை பொறுப்பாளர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.