பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்


பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
x

ராணிப்பேட்டையில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது.

ராணிப்பேட்டை

தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் ராணிப்பேட்டையில் நடந்தது.

மாவட்ட செயலாளரும், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சருமான ஆர்.காந்தி தலைமை தாங்கினார்.

மாவட்ட நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, சிவானந்தம், துரைமஸ்தான், குமுதா, ஏ.வி.சாரதி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரம், அசோகன், கலைமணி, ராணிப்பேட்டை நகராட்சி தலைவர் சுஜாதா வினோத் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராணிப்பேட்டை நகர செயலாளர் பூங்காவனம் வரவேற்றார்.

தி.மு.க. விளையாட்டு துறை மாநில துணை செயலாளரும், ஆற்காடு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈஸ்வரப்பன், திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன் ஆகியோர் பேசினர்.

முன்னாள் மத்திய மந்திரியும், எம்.பி.யுமான தயாநிதி சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தை இந்தியாவிலேயே முன்மாதிரி மாநிலமாக மாற்றுவேன் என உறுதியோடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

தமிழகத்தில் இந்து, இஸ்லாமிய உறவுகளுக்கிடையே பா.ஜ.க. ஒரு பிரிவினையை ஏற்படுத்த முயல்கிறது. சகோதரத்துவத்துடன் பழகி வரும் இந்து - இஸ்லாமியர்களின் நல்லுறவை அசைக்க முடியாது என்றார்.

கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காந்தி பேசுகையில், அன்பழகன் தலைமையில் தான் எனக்கு திருமணம் நடந்தது. அவர் மாதிரி ஒரு தலைவரை பார்க்க முடியாது.

ஓட்டு போட்டவர்களுக்கும், போடாதவர்களுக்கும் பாகுபாடில்லாமல் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்கிறார் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் சேஷா வெங்கட், ஒன்றிய செயலாளர்கள் அக்ராவரம் ஏ.கே.முருகன், நந்தகுமார், வாலாஜா நகரமன்ற தலைவர் ஹரிணி தில்லை, மேல்விஷாரம் நகர மன்ற தலைவர் முகமதுஅமீன், நகர செயலாளர்கள் தில்லை, சரவணன், ஒன்றிய குழு தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அனைத்து அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வினோத் நன்றி கூறினார்.


Next Story