பர்கூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.6¾ லட்சத்தில் நில ஆவண மேலாண்மை மையம்-கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்


பர்கூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.6¾ லட்சத்தில் நில ஆவண மேலாண்மை மையம்-கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 22 Sept 2022 12:15 AM IST (Updated: 22 Sept 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

பர்கூர்:

பர்கூர் தாலுகா அலுவலகத்தில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்தில் நிலஆவண மேலாண்மை மையத்தை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி திறந்து வைத்தார்.

நிலஆவண மேலாண்மை மையம்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவில் நிலஆவண மேலாண்மை மையத்தை மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி நேற்று திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றினார். பின்னர் அவர் கூறியதாவது:-

பர்கூர் தாலுகா அலுவலக வளாகத்தில் பொதுப்பணித்துறையால் நிறுவப்பட்டுள்ள நில அளவை மையத்தில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பில் புதியதாக நிறுவப்பட்டுள்ள நிலஆவண மேலாண்மை பிரிவு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நகல்களை பெறலாம்

நில உடமைதாரர்கள் தங்களின் நிலம் சம்பந்தமாக பட்டா, புலப்படம், சிட்டா, நகர நில அளவை பதிவேடுகள், அ-பதிவேடு மற்றும் அரசு புறம்போக்கு ஆகிய அனைத்து விவரங்களையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், ஒரே இடத்தில் நிலம் தொடர்பான விவரங்களை நகல் பெற்று கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் நில ஆவண மேலாண்மை மையத்தை தொடர்பு கொண்டு விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் சதீஷ்குமார், உதவி இயக்குனர் (நில அளவை) சேகரன், தாசில்தார்கள் பன்னீர்செல்வி, தெய்வநாயகி, கோட்ட நில அளவை ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி, நில அளவையர் கோவிந்தராஜ், துணை தாசில்தார் பத்மா, சார் அளவையர்கள் நாகராஜன், கலா, முனியம்மாள், வெங்கடாசலம், பண்பரசு, வளையாபதி, லீலாவதி, வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story