மகளிர் பயில்வுகள் மையம் தொடக்க விழா
கள்ளக்குறிச்சி அரசு கல்லூரியில் மகளிர் பயில்வுகள் மையம் தொடக்க விழா
கள்ளக்குறிச்சி
சின்னசேலம்
கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சின்னசேலம் அடுத்த கனியாமூர் தனியார் கல்வியில் கல்லூரியில் தற்காலிகமாக இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் மகளிர் பயில்வுகள் மையம் தொடக்க விழா நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர்(கூடுதல் பொறுப்பு) தமிழரசி மகளிருக்கான பயில்வுகள் சார்ந்த கருத்துகளை எடுத்துரைத்தார். மகளிர் பயில்வுகள் மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் கணிதத்துறை தலைவருமான முனைவர் உமா வரவேற்றார். ஆங்கிலத்துறை தலைவர் சங்கீதா வாழ்த்துரை வழங்கினார். நிகழ்ச்சியில் அனைத்து துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் வணிகவியல் துறை தலைவர் வீரலட்சுமி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story