வேலூர் லாங்கு பஜாரில் சென்டர் மீடியன் அகற்றப்படும்
வேலூர் லாங்கு பஜாரில் சென்டர் மீடியன் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் லாங்கு பஜாரில் சென்டர் மீடியன் அகற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் லாங்கு பஜார் முக்கிய வணிக பகுதியாக திகழ்கிறது. இங்குள்ள கடைகளுக்கும், நேதாஜி மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பலர் சாலைகளில் வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
மேலும் தள்ளுவண்டி கடைகள் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும், கடைக்காரர்களும் நடைபாதையை ஆக்கிரமித்துள்ளதாகவும் புகார்கள் உள்ளன.
இந்தநிலையில் சில வாரங்களுக்கு முன்பு கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார். அப்போது ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். மேலும் இடையூறாக உள்ள சென்டர் மீடியனும் அகற்றப்படும் என்று தெரிவித்தார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'லாங்கு பஜாரில் சென்டர் மீடியன் இருப்பதால் வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. எனவே அவை அகற்றப்பட உள்ளது. ஆனால் அதற்கு மாமன்ற கூட்டத்தின் ஒப்புதல் மற்றும் தீர்மானம் அவசியமாகிறது. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் அந்த சென்டர் மீடியன் அகற்றப்படும்' என்றனர்.