மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க கூட்டம்
ஸ்ரீவைகுண்டத்தில் மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி
ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் வ.உ.சி. திடலில் மத்திய பா.ஜனதா அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமை தாங்கினார். செயலாளர் எஸ்.ஆர்.சங்கர் வரவேற்றார். சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ, மாநில துணை தலைவர் சசிகலா புஷ்பா, மாநில பொதுச் செயலாளர் பொன் பாலகணபதி, மாவட்ட மகளிர் அணி தலைவர் தேன்மொழி, மாவட்ட துணை தலைவர் ரேவதி கண்ணன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில் வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சிவமுருகன் ஆதித்தன், சத்தியசீலன், மாவட்ட துணை தலைவர் செல்வராஜ், வணிகர் பிரிவு மாநில தலைவர் ராஜ கண்ணன், மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனகுமார், மாவட்ட பொதுச்செயலாளர் ராஜா உள்ளிட்ட பா.ஜ.கவினர் திரளானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story