மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வேலூர்

வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலூர் அண்ணாசாலையில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் டெல்லிபாபு, துணைத்தலைவர் சரவணன், பொருளாளர் ரவிசந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை தொடங்க வேண்டும், மத்திய கூட்டுறவு வங்கியில் உதவி மேலாளர் பணியிடங்களுக்கான 3-1 என்ற நடைமுறையை ரத்து செய்ய வேண்டும், கூட்டுறவு பணியாளர்களுக்கு கருணை ஓய்வூதியம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில், வேலூர் மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க நிர்வாகி விஜயசாரதி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்க உதவி பொருளாளர் பாஸ்கரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story