அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழு ஆய்வு நிறைவு
திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மத்திய குழு ஆய்வு நிறைவு பெற்றது.
திருநெல்வேலி
திசையன்விளை:
திசையன்விளை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தேசிய தரசான்றிதழ் வழங்கும் மத்திய குழுவினர் கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர். இந்த ஆய்வானது குழுவில் இடம்பெற்ற கேரள மாநிலத்தை சேர்ந்த டாக்டர் சிவதாஸ், மராட்டிய மாநிலத்தை சேர்ந்த டாக்டர் சுகந்தா கெய்வாட் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆய்வானது நிறைவு பெற்றுள்ளது. பின்னர் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய குழுவினர், மருத்துவமனையின் கட்டமைப்பு நோயாளிகளின் நலன் சார்ந்து இருக்க வேண்டும். நோயாளிகளின் பெயர் பதிவு செய்யும் இடம், டாக்டர் பரிசோதனை செய்யும் இடம், மருந்து வாங்கும் இடம், சிகிச்சை அளிக்கும் இடம் அனைத்தும் அருகருகே இருக்க வேண்டும். ஆய்வின்போது மட்டும் இல்லாமல் எப்போதும் நோயாளிகளின் நலனை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story