மத்திய புவியியல் துறையினர் ஆய்வு


மத்திய புவியியல் துறையினர் ஆய்வு
x

கூடலூரில் வீடுகள், நிலங்களில் விரிசல் ஏற்பட்ட இடங்களில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

நீலகிரி

கூடலூர்,

கூடலூரில் வீடுகள், நிலங்களில் விரிசல் ஏற்பட்ட இடங்களில் மத்திய புவியியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

விரிசல் ஏற்பட்ட இடங்கள்

கூடலூர் பகுதியில் 2 வாரங்களுக்கு மேலாக தொடர் கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. மேலும் வீடுகளும் இடிந்து சேதமானது. இந்தநிலையில் கூடலூர்-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் தெய்வமலை பகுதியில் 80 மீட்டர் தூரத்துக்கு விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து அப்பகுதியில் இருந்து கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட நடு கூடலூர், ராஜகோபாலபுரம் வரை நிலத்தில் விரிசல்கள் ஏற்பட்டது.

மேலும் சுமார் 30-க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல்கள் ஏற்பட்டது. இதில் பெரும்பாலான வீடுகள் வசிக்க முடியாத வகையில் பலத்த சேதம் அடைந்து உள்ளது. இதனால் பாதுகாப்பற்ற நிலை உள்ளதால், சொந்த வீடுகளை விட்டு வாடகைக்கு குடிபெயரும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். இதனிடையே மாநில புவியியல் துறையினர் கடந்த வாரம் விரிசல்கள் ஏற்பட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர்.

புவியியல் துறையினர் ஆய்வு

இந்தநிலையில் மத்திய புவியியல் துறையை சேர்ந்த அரசஹ் அகமது, மகேஷ் குமார் ஆகியோர் நேற்று முன்தினம் தெய்வமலை தொடங்கி நடு கூடலூர், ராஜகோபாலபுரம் உள்ளிட்ட இடங்களில் நிலத்தில் ஏற்பட்ட விரிசல்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் விரிசலால் சேதம் அடைந்த வீடுகளையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மத்திய புவியியல் துறையினர் ஆய்வு செய்தனர். இதுகுறித்து மத்திய புவியியல் துறையினர் தரப்பில் கூறும் போது, இப்பகுதியில் ஏற்பட்ட விரிசல்கள் மற்றும் சேதங்கள் பற்றிய அறிக்கை சமர்ப்பிக்கப்படும். இதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என விளக்கம் அளிக்கப்பட்டது.



Next Story